Tuesday, October 15, 2013

உப்புகருவாடும் டெங்கு காய்ச்சலும்

ஊரில் பலருக்கு டெங்கு வந்துள்ளது. எனக்கு அதே நேரம் காய்ச்சலும் உடல் வலியும் வருகிறது. அன்று நான் கருவாடு சாப்பிடுகிறேன். அடுத்த நாள் காய்ச்சல் சரியாகிவிடுகிறது 

நவீன விஞ்ஞான மருத்துவத்திற்கும் 
பிற விஞ்ஞானத்தின் அடிப்படை இல்லாத பாரம்பரிய மருத்துவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாமா 



-oOo-

விஞ்ஞானத்தின் அடிப்படை இல்லாத பாரம்பரிய மருத்துவ முறைகளின் படி
கருவாடு டெங்கு காசய்ச்சலை குணமாக்கும் என்று நான் கூறலாம் . யாரும் கேள்வி கேட்க முடியாது.

விஞ்ஞானத்தின் அடிப்படை இல்லாத மருத்துவ பாரம்பரிய முறைகளின் படி
டெங்கு காய்ச்சலும் மருந்து இல்லை என்பதால் அரசு கருவாடு சாப்பிட அறிவுறுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கலாம்

கருவாடு என்பது உள்நாட்டு தயாரிப்பு. எனவே அது தான் சிறந்தது என்று சில "தேச பக்தர்கள்" ஆதரவு தெரிவிப்பார்கள்.

டெங்கு என்பது நோயே கிடையாது. அது அமெரிக்க ஏகாபத்தியத்தின் சதி என்று சில (ராஜஸ்தானில் அணுவுலையை எதிர்க்கும், தமிழகத்தில் அணுவுலையை ஆதரிக்கும்) கொள்கைவாதிகள் எழுதுவார்கள்

இது தான் விஞ்ஞான அடிப்படை இல்லாத பாரம்பரிய மருத்துவ முறைகளில் நடப்பது. இதில் ஏமாந்து உயிரையும் பணத்தையும் இழப்பவர்கள் அதிகம்
-oOo-
அதே நேரத்தில்
நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் "அன்று நான் கருவாடு சாப்பிடுகிறேன். அடுத்த நாள் காய்ச்சல் சரியாகிவிடுகிறது" என்று நான் கூறினால் அதை Case Report ஆக கருதுவார்கள்

அதன் பிறகு அது போல் யாருக்காவது சரியாகியிருக்கிறதா என்று பார்ப்பார்கள்

உடனடியாக டெங்கு காய்ச்சலிற்கு கருவாடு மருந்து என்று கூற மாட்டார்கள்

இந்த கருவாட்டினை எடுத்து பல கட்ட சோதனைகள் செய்வார்கள்
Preclinical evaluation - also called as Animal Studies and
Clinical Trials - also called as Human Studies
-oOo-
Preclinical Evaluation involve a group of studies
Pharmacodynamic Studies
In Vitro
In Vivo
Toxicological Studies
Acute Toxicity - To Find LD 50
Sub Acute Toxicity - Biochemical and Histopathological Changes
Chronic Toxicity - with rodent and non rodent species
Special Toxicity
Effective on Reproductive Performance - Tests on Mating Behaviour, Fertility, Parturition, lactation, perinatal effects, post natal effects
Teratogenicity - Test for Skeletal or Visceral Anomaly
Carcinogenicity
Mutagenicity - AMES Test
Pharmacokinetic Studies - in rats, dogs, monkeys - absoption, distribution , metabolism, excretion, relative bioavailability after oral and IV routes, elimination half life
Assessment of Safety Index - LD 50 and ED 50
-oOo-
Clinical Trials can be grouped in Phases
Phase I
Small Number of Healthy Volunteers (20 to 25)
Non Blind or Open Label
To determine whether human and animals show significant pharmacokinetic difference
To determine the safe and tolerated dose in humans
To determine the pharmacokinetics of th drugs in humans
To detect any predictable toxicity

இது வரையில் நடை பெற்ற சோதனைகள் எல்லாம் இந்த மருந்து பாதுகாப்பானதா என்பதை அறிந்து கொள்ள

இவ்வளவு சோதனைகளும் செய்வதால் தான் நவீன விஞ்ஞான மருந்துகளின் பக்க விளைவுகள் வெளிப்படையாக தெரியவருகிறது. இது போல் எந்த சோதனையும் செய்யவில்லை என்றால் "எங்கள் மருந்தில் பக்க விளைவுகள் கிடையாது" என்று ஊரை ஏமாற்றலாம்  

இவ்வளவு பரிசோதனைகளும் நடை பெற்ற பின்னரே அந்த மருந்து வேலை செய்கிறதான் என்பது சோதிக்கப்படும்

Phase II
Early Phase II
In 20 to 200 patients
Done in Patients with diseases
Done by Single Blind Method
Done to establish a dose range
Done to see the potential therapeutic benefits and side effects
Late Phase II
On a larger number of patients
Done by Double Blind Method
Done to ensure safety and efficacy of the new drug
Done to compare the data with a standard Drug

இதில் தான் இந்த மருந்தை ஆறுதல் மருந்துடன் (placebo) ஒப்பிட்டு பார்ப்பார்கள்
அதன் பிறகு இதே போலுள்ள மற்றொரு மருந்துடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள்

ஒப்பிட்டு பார்க்கும் போது ஆறுதல் மருந்தினால் ஏற்படும் விளைவுகளை விட இந்த மருந்து அதிகம் பலனளிக்கிறதா என்று பார்க்க வேண்டும்

இந்த சோதனை செய்யப்படாவிட்டால் இந்த மருந்து உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பது தெரியாதே

Phase III
Done in a large scale
250 to 1000 plus patients
Done by Double Blind Method
Randomised Control Trial
Sometimes even Cross Over Studies are used
After the trial, statistical analysis is performed
இதற்கு பிறகு தான் அந்த மருந்து அங்கிகரீக்கப்படும் After that the New Drug Application is issued . . .

இதைத்தான் FDA Approval என்றெல்லாம் கூறுகிறார்கள்

அது மட்டும் அல்ல

அதன் பிறகு
Phase IV
Done after the drug gets the application
Post Licensing Phase
No fixed duration
Monitored for several years

நவீன மருத்துவம் மருந்துக்களின் பக்க விளைவுகளை கூறுவதன் காரணம் - இந்த சோதனைகளே

இது போல் எந்த சோதனையும் செய்யாமல் எங்கள் மருந்தில் பக்க விளைவுகள் இல்லை என்பது ஊரை ஏமாற்றும் செயலே

No comments:

Post a Comment