Thursday, January 21, 2016

மாத்திரை மருந்துகளில் காலாவதி தேதி, மருத்துவர்கள் ஏன் தேவைக்கும் மிகுதியான மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள்

From Facebook

//
மாத்திரை மருந்துகளில் காலாவதி தேதி எந்த அளவுக்கு சரியாக செயல்படுகிறது ?
குறிப்பிட்ட மருந்துகளில் expires Feb 2016, என்றிருந்தால் 01 Mar 2016 முதல் பயன்படுத்தக்கூடாதா ?
//
ஆமாம்
//
எனக்கென்னவோ மருந்து உற்பத்தியாளர்கள மருந்து காலாவதியாகும் தேதியை மிக சரியாக கணக்கிட்டு மாத்திரை பட்டியின் மேல் ஒட்டுகிறார்கள் என்கிற நம்பிக்கையே இல்லை
//
நம்பிக்கை வேறு
கருத்து வேறு
தகவல் வேறு
//
குறிப்பிட்ட அளவுக்கு பரிந்துரை செய்யும்
மருந்து பெரும்பாலும் குறிப்பிட்ட நோய் சரியானதும் பயன்படுத்தப்படுவதில்லை,
//
அது பெரும் பிழை
இது தான் சிக்கல்
//
திரும்பவும் அதே நோய் தாக்கத்திற்கு எஞ்சியதை பயன்படுத்த பார்க்கும் போது பெரும்பாலும் தேதி காலாவதி ஆகியிருக்கும்
//
இது பயன்படுத்தாதால் வரும் குழப்பம்
//
எனக்கு வரும் ஐயம்
காலாவதி ஆகும் மருந்துகள் என்று மருந்து வகைகளை எப்படி கணக்கிடுகிறார்கள் ?
//
Spontaneous change to a metabolically active or inactive component
//
எல்லாவித அலோபதி மருந்தும் காலாவதிக்கு உட்பட்டதா ?
//
ஆமாம்
//
மருத்துவர்கள் ஏன் தேவைக்கும் மிகுதியான மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள ?
//
தேவைக்கு மிகுதியாக பரிந்துரைப்பதில்லை
நோயாளிகள் தேவையான மருந்தை சாப்பிடுவதில்லை
இது தான் நிஜம்
//
காலாவதி மருந்தை திரும்ப கொடுத்து குறிப்பிட்ட அளவு கழிவை (discount) செய்ய ஏன் வழிமுறைகள் இல்லை
//
காரணம்
அது காலவாதி ஆக விட்டது உங்கள் தவறு
ஐந்து நாட்கள் சாப்பிட வேண்டிய antibioticஐ மூன்றாவது நாள் நிறுத்துவது உங்கள் தவறு
//
காலாவதி மருந்துகளால் பல பில்லியன் டாலர் என்று முன் கூட்டிய வருவாயை கருத்தில் கொண்டு மருந்து கூடுதல் உற்பத்தி நடை பெற்று கூடுதலாகவே நோயாளிகள் தலையில் கட்டப்படுகிறதா ?
//
இல்லை
அது காலவாதி ஆக விட்டது உங்கள் தவறு
ஐந்து நாட்கள் சாப்பிட வேண்டிய antibioticஐ மூன்றாவது நாள் நிறுத்துவது உங்கள் தவறு
//
இது மறைமுக ஊழல் என்றே கருதுகிறேன்,
//
இல்லை
இது நேரடியான நோயாளியின் தவறு
//
இவற்றில் அரசுக்கு வரி வருவாய் கிடைப்பதால் காலாவதி குறித்து எந்த கட்டுப்பாடுகளையும் ரிடர்ன் பாலிசிகளையும் அரசு ஏற்படுத்தாது எதற்காக ?
//
இல்லை
நோயாளிகள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும்
சாப்பிடாவிட்டால் அது பிழை

No comments:

Post a Comment