Tuesday, February 23, 2016

வலிப்பு நோயா ? : பாகம் 2 : ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?

வலிப்பு நோயா ? : பாகம் 2
*****************************
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?

-oOo-

வலிப்பு நோய் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு முன்னர்,
1. நோய் (Disease)
2. நோய்குறி (Symptom / Sign)
3. நோய்குழு (Group of Diseases)
4. நோய்வீச்சு (Spectrum of Disease)

ஆகிய பதங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்

-oOo-

நோய் என்றால் என்ன ? மனித உடல் தனது இயல்பான செயல்பாட்டினை இழப்பதே நோய் அல்லது பிணி ஆகும்

இப்படி இயல்பான செயல்பாட்டினை இழக்கும் போது உடலில் பல மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே நோய்குறி

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
அதே போல் ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்

நோய்வீச்சு (Spectrum of disease) என்றால் என்ன ? ஒரு நோயில் சில நோய்குறிகள் பிரதானமாக இருக்கும். ஆனால் அது தவிர பல நோய்குறிகளும் இருக்கும். இவை அனைத்து சேர்ந்தது ஒரு நோய்வீச்சு

அப்படி என்றால் நோய்குழு (Group of diseases) என்றால் என்ன ?
ஒரு நோய்குறி உள்ள பல நோய்கள் நோய்குழு என்று அழைக்கப்படுகின்றன

-oOo-

உதாரணமாக

மலேரியா (Malaria) என்பது நோய் (Disease)
இதன் முக்கிய நோய்குறி (Sign) காய்ச்சல் (Fever)
மலேரியா நோய் வீச்சு (Spectrum of Malaria) என்றா; காய்ச்சல் தவிர இரத்தத்தில் அணுக்கள் உடைவது, ஈரல், மண்ணீரல் பெரிதாவது என்று பலவும் இருக்கும்
காய்ச்சல் நோய்குழுவில் (Fever Group of Diseases) காய்ச்சல் பிரதானமாக உள்ள பிற நோய்களும் இருக்கும். உதாரணமாக - டைப்பாயிடு

-oOo-

கைகால் வலிப்பு (fits) என்பது ஒரு நோய் (disease) அல்ல.
அது ஒரு நோய்க்குறி (sign). மூளைக்குள் மின் இணைப்புகள் அல்லது வேதிபொருட்களில் ஏற்பட்ட பிரச்சனையினால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது

இந்த கை கால் வலிப்பு ஏற்படக்காரணமான பிரச்சனை ஒன்று இருக்கும் அல்லவா. அது தான் நோய் (disease)

பல நோய்களில் கைகால் வலிப்பு வரலாம் அல்லவா, அவை எல்லாம் சேர்ந்து தான் வலிப்பு நோய் (Epilepsy)

Epilepsy is a group of neurological diseases characterized by epileptic seizures. அதாவது வலிப்பு ஏற்படும் அனைத்து நோய்களும் சேர்ந்த நோய்குழுதான் வலிப்பு நோய்கள்


-oOo-

இதில் முக்கியமான விஷயம்

வலிப்பு என்பது வேறு
வலிப்பு நோய் என்பது வேறு

வலிப்பு என்பது பல காரணங்களினால் ஏற்படலாம். அந்த காரணங்களில் சில காரணங்கள் வலிப்பு நோய்கள்

வலிப்பு நோயில் பல நோய்குறிகள் அல்லது பாதிப்புகள் ஏற்படலாம். அந்த பல பாதிப்புகள் அல்லது நோய்குறிகளில் ஒன்று வலிப்பு

அதே போல்

வலிப்பு ஏற்படாத வலிப்பு நோய்களும் உள்ளன
வலிப்பு நோய்கள் தவிர பல நோய்களிலும் வலிப்பு ஏற்படலாம்

Fits or Seizures is a Sign
Epilepsy is a disease

Fits can occur due to various reasons. Epilepsy is one of them
Epilepsy can have various signs and Symptoms. Fits is one of them

There can be epilepsy without Fits
There can be Fits without Epilepsy

-oOo-

இதை திரும்ப திரும்ப கூறுவதன் நோக்கம் என்னவென்றால்

நமது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கு

நோய்க்கும்
நோய்குறிக்கும் வித்தியாசம் தெரியாது

எந்த காரணத்தினால் வலிப்பு ஏற்பட்டாலும் அவை அனைத்தும் ஒரே மருந்தினால் சரியாகிவிடும் என்ற தவறான எண்ணம் பலருக்கும் உள்ளது

-oOo-

இப்பொழுது நாம் முதலில் பார்த்த மூன்றூ கேள்விகளுக்கும் விடை காணலாம்

1
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?

இல்லை !
அப்படி அவசியம் இல்லை

வலிப்பு எந்த காரணத்தினால், எந்த நோயினால் வந்தது என்பதை கண்டு பிடித்து அது வலிப்பு நோயினால் வந்ததா, அல்லது பிற காரணங்களினால் வந்ததா என்று பார்க்க வேண்டும்

பிற காரணங்களினால் வந்தது என்றால்
அதாவது
வேறு நோய்களினால் வந்தது என்றால்
அந்த நோய்க்குரிய சிகிச்சை எடுத்தாலே போதும். வலிப்பு அதன் பிறகு வராது

2
கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?
இல்லை !
கை கால் வலிப்பு ஏற்படாமல் கூட வலிப்பு நோயின் பிற பாதிப்புகள் இருக்கலாம்

-oOo-

வலிப்பு நோயின் பிற நோய்குறிகள் யாவை ?

தொடர்ந்து பார்ப்போம்

No comments:

Post a Comment